கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையம் முற்றுகை!

கார்கள் மோதியதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கருமத்தம்பட்டியில் அரசூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் காரை பின்னோக்கி எடுக்கும் பொழுது பின்னால் நின்ற பூபாலன் என்பவரது கார் மீது மோதியது. அப்பொழுது சமாதானம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பூபாலன்,ஜெரோம்,சைமன்,சரவணன் மோதியதில் ஏற்பட்ட தகராறில் யுவராஜ்,ரமேஷ்,ராசு,சசிக்குமார்,அரசன்,பிரேம் குமார் ஆகியோருக்கு தா்ம அடி கொடுத்துள்ளனர்.

 

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வழக்கில் தொடர்புடைய சரவணன் என்பவர் தப்பி ஓடி விட்டார்.அவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


Leave a Reply