இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மீனவர்கள் சேமிப்பு, நிவாரண திட்டத்தில் மோசடி பெண்கள் புகார்

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் வாழும் புதுமடம் மீனவ பெண்கள் இன்று மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் 20 முதல் 30 வரை கொண்ட பெண்கள் புகார் மனு அளித்தனர்.

 

இந்த புகாரில் கூறியதாவது- கடந்த நான்கு வருடங்களாக தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் உச்சிபுளி அருகில் புதுமடம் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கத்தில் வருட சந்தா ரூபாய்
1,700 பணத்தை சங்க தலைவியான பாத்திமா கனி என்பவரிடம் கொடுத்து செலுத்தி வந்தோம்.

 

இதன் அடிப்படையில் ரூபாய் 4500 நிவாரணத் தொகையை அரசு வழங்கி வந்தது. மேலும் 2018 – 2019 ஆண்டிற்கான சேமிப்பு தொகை அக்டோபர் மாதம் வரை நாங்கள் கட்டிய பணம் முறையாக எங்ளுக்கு வழங்காமல் கையாடல் நடத்துள்ளது. இது குறித்து மீன் துறை உதவி இயக்குனரிடம், நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து  புகாா் அளித்துள்ளோம். மேலும் இது தொடா்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், நாங்கள் செலுத்திய பணத்தை அங்கு செலுத்தாமல், எங்கள் பெயர்களை நீக்கிவிட்டு, பணத்தை கையாடல் செய்துள்ளார் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

புதுமடம் மீனவ கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு விதமான மோசடி நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ பெண்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Leave a Reply