ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதப் போறீங்களா? உங்களுக்கான தேர்வு அட்டவணை இதோ!

தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

 

நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தே்ாவு (TNTET) குறித்த அறிவிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வரை பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, ஜூன் 8 மற்றும் 9ம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ஆம் தேதி தகுதித் தோ்வுக்கான முதல் தாள்; 9ம் தேதி இரண்டாம் தாளுக்கான தோ்வுகள் நடைபெறும். இத்தோ்வு காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை நடைபெறும்.

 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை, http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply