பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயார்! கவுதம் காம்பீர் எதற்காக இப்படி சொன்னார் தெரியுமா?

டெல்லி மக்களவை தொகுதி ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் குறித்து, தாம் துண்டு பிரசுரம் விவகாரம் குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால், தூக்கில் தொங்கவும் தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

 

டெல்லி கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அதிஷி போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில், வரும் 12 இல் வாக்குப்பதிவு நடக்கிறது.

 

இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தின் போது, பெண் வேட்பாளர் அதிஷியை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி துணை முதல்வர் சிசோடியாவும், வேட்பாளர் அதிஷியும், கவுதம் கம்பீர்தான் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

 

இதை திட்டவட்டமாக மறுத்துள்ள கவுதம் காம்பீர், இச்செயலில் தாம் ஈடுபட்டதாக நிரூபித்தால், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு என்ற குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால், பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயார் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

 

இதை கெஜ்ரிவால் நிரூபிக்கவில்லை என்றால் அவர் அரசியலைவிட்டு விலக தயாரா எனவும் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம், டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply