நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு, சங்கத்தமிழன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது; அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது, சிந்துபாத் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது. அதுமட்டுமின்றி, கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய் சந்தர் இயக்கும் இந்த படத்திற்கு ‘சங்கத்தமிழன்’ என்று பெயர் வைக்கப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தை, பழம்பெரும் பட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். கதாநாயகிகளாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் நடிக்கின்றனர். நாசர், சூரி உள்ளிட்ட பலரும் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.