திருப்பூர் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் தீ! அதிகாலை நேரத்தில் எதிர்பாராத விபத்து!!

திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து, இன்று அதிகாலை ஓசூர்அருகே தீப்பிடித்து எரிந்தது; இதில், அதிர்ஷ்டவசமாக 20 பயணிகள் உயிர்தப்பினர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து, திருப்பூருக்கு நேற்றிரவு ஆம்னி பேருந்து புறப்பட்டது. அதில், 20 பயணிகள் இருந்துள்ளனர். இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த சின்னார் என்ற பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக, ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி, பயணிகளை உடனடியாக இறங்கச் சொன்னார். இதனால், அவர்கள் அனைவரும் உயிர்தப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர்.இது குறித்து விசாரணை நடக்கிறது.


Leave a Reply