பிளஸ் 1 தேர்விலும் சாதித்துக்காட்டிய திருப்பூர்! மாநில அளவில் 2ம் இடம்; முதலிடத்தில் ஈரோடு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகளிலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் சாதித்துக் காட்டியுள்ளது; இது, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ – மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இன்று காலை, தேர்வு முடிவுகள் வெளியிடப்படன.

 

இதில், மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இம்மாவட்டம், 98.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 89.29 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

 

மொத்தமாக, 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.5 சதவீதம், மாணவர்கள் 93.3 சதவீதம் ஆகும். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.


Leave a Reply