தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்! 40 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Agency


பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 40 பயணிகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.

 

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து, மூர் மாஸ்கான் என்ற இடத்திற்கு விமானம் ஒன்று புறப்பட்டது. சூப்பர் ஜெட் ரக விமானத்தில் ஊழியர்கள் உட்பட 78 இருந்தனர்.

 

புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். உடனடியாக பதற்றத்துடன், விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு தரையிறங்க முயற்சித்தனர்.

 

அவ்வாறு தரையிறங்கும் போது எதிர்பாராமல் விமானம் தீ பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக, அஞ்சப்படுகிறது.

 

விபத்தின் போது விமானம் தீ பிடித்து கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.