வெடிமருந்துகள், துப்பாக்கியுடன் கும்பல் கைது! பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்; அவர்கள், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

 

கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில், சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக, வனத்துறையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து ,பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

இதில் செம்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (48 ), மாரப்பக் கவுண்டன் புதூரை சேர்ந்த தமிழரசன் (38 ), பெரியபோதுவை சேர்ந்த சுந்தர்ராஜ் ( 51 ), கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்த பிரகாஷ் (29), மாரப்பக் கவுண்டன் புதூரை சேர்ந்த துரைசாமி (62 ) ஆகியோர், மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

 

இதையடுத்து, அவர்கள் நான்கு பேரியயும் வனத்துறையினர் கைது செய்து, 1972 வனப் பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்துள்ளனர் .இதில் பாலகிருஷ்ணன் தனது வீட்டிலேயே நாட்டு துப்பாக்கி தயாரிப்பது தெரியவந்துள்ளது.

 

கைதானவர்களிடம் இருந்து இரண்டு மான்கொம்பு, நாட்டு துப்பாக்கி பயன்படுத்தும் தோட்டாக்கள் 76, இரட்டை குழல் துப்பாக்கி பயன்படுத்தும் தோட்டாக்கள் 24, 100 கிராம் மருந்து, துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்கள் போன்றவற்றை கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply