5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில், 5ஆம் கட்டமாக, 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், இதுவரை தமிழகம், புதுச்சேரி உடபட, 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இன்று, ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 

உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்தியபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்ட்டில் 4, காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

 

 

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகள் முக்கியமானவை. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.


Leave a Reply