ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்து, நாளை தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்குகிறது. நாளைய போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் முடிவில், முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் நாளை இரவு நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
வரும் 8ஆம் விசாகப்பட்டினத்தில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) 3 மற்றும் 4 ஆம் இடங்களை பெற்ற டெல்லி – ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதில் தோற்கும் அணி, தொடரில் இருந்து வெளியேறும்.
வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட அணியுடன், வரும் 10 ஆம் தேதி விளையாடும். இறுதிப்போட்டி, வரும் 12 ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.