அதிகாலையில் வாக்குபதிவு நடத்தும் திட்டம்! தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு இதுதான்…

அதிகாலையில் வாக்குப்பதிவு நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனை சாத்தியமற்றது என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

நாடுமுழுவதும் பல கட்டங்களாக தற்போது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயில் காலத்தில் வாக்குப்பதிவு நடப்பதால், பலரும் வாக்குச்சாவடிக்கு வர தயங்கி, பதிவாகும் வாக்கு சதவீதம் குறைவதற்கு காரணமாகிறது.

 

அத்துடன், ரம்ஜான் நோன்பும் வருவதால், எஞ்சிய வாக்குப் பதிவை முன்னதாக, தொடங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், காலை 7 மணிக்கு பதிலாக, அதிகாலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்க உத்தரவிட என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஞ்சிய 3 கட்ட வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கே தொடங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யலாம் என்று யோசனை தெரிவித்தது. ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

 

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறுகையில், தேர்தலை அதிகாலையில் தொடங்கினால், பூத் ஏஜெண்டுகளும் முன்கூட்டியே வர வேண்டியிருக்கும். ஆனால் தற்போது 6 மணிக்கு வர வேண்டிய பூத் ஏஜெண்டுகள் கூட சரியாக வருவதில்லை. இந்த யோசனை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளது.


Leave a Reply