லாரி – கார் நேருக்குநேர் மோதி விபத்து! குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பலி

திருநெல்வேலி அருகே, லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

 

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது கரும்புளியூத்து. இங்கு தென்காசி – திருநெல்வேலி சாலையில் சென்று கொண்டிருந்த கார், எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.

 

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த, குழந்தை உட்பட 5 பேர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். அவர்கள், திருநெல்வேலி கே.டி.சி. நகரை சேர்ந்த முருகன், நிரஞ்சன் குமார், ராஜசேகர், அவரது 3 வயது குழந்தை தனிக்கா, மீனாட்சிபுரம் மகேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், லாரியில் சிக்கிய காரை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.


Leave a Reply