பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது! வீதிக்கு வந்த மாமியார்- மருமகள் சண்டை!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி, வீட்டுக்குள் புகுந்து வாக்குவாதம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

 

வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். அவரது மனைவி ஹசின் ஜஹான், ஏற்கனவே ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு, சூதாட்ட புகார் போன்றவற்றை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

 

 

ஷமியின் குடும்பத்தார், தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் அலிபூர் கிராமத்தில் வசிக்கின்றனர். அங்கு இரு தினங்களுக்கு முன் தனது குழந்தையுடன் சென்ற ஹசினை குடும்பத்தார் அனுமதிக்கவில்லை. அதனால் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இதையடுத்து ஷமின் தாய், போலீசில் புகார் செய்தார். அதன் பேரின் ஷமியின் மனைவியை கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஹசினுக்கு தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply