பெண்களிடம் அத்துமீறல் காரமடை பிடிஒ., ”சஸ்பெண்ட்- கோவை கலெக்டர் அதிரடி…

Publish by: விஜயகுமார் --- Photo : கோவை விஜயகுமார்


கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன்.

 

இவர் கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி வந்த நிலையில் இவர் மீது கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து நிதிகளில் முறைகேடு செய்வது,ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது என அடுத்தடுத்த புகார்கள் எழுந்து வந்தது.அத்துடன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டு அத்துமீறி வந்ததாகவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்கள் வந்தன.

 

இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கடந்த இரு தினங்களாக இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் புகார் மீது விசாரிக்க முகாந்திரம் இருப்பதால் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியில் இருந்து ரவிசந்திரனை விடுவித்து உத்தரவிட்டுளார்.

 

மேலும்,அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும்,குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றம் நிருபிக்கபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply