4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

தமிழகத்தில், சூலூர் உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

 

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுடன் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது. காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் ஓட்டப்பிடாரத்தில் மோகன், திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி, சூலூரில் கந்தசாமி, அரவக்குறிச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுகின்றனர். தி.மு.க. தரப்பில், சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன்ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

மக்கள் நீதி மய்யம் சார்பில், திருப்பரங்குன்றத்தில் சக்திவேல், சூலூரில் ஜி.மயில்சாமி, அரவக்குறிச்சியில் எஸ்.மோகன்ராஜ், ஒட்டப்பிடாரத்தில் எம்.காந்தி போட்டியிடுகின்றனர். இந்த 4 தொகுதிகளிலும் கடந்த 22 இல் மனுதாக்கல் தொடங்கியது; இன்று நிறைவடைந்தது.

 

இன்று அதிமுக, அமமுக மற்றும் சில கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். செவ்வாய் கிழமை மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மே 2ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.


Leave a Reply