இந்தியாவின் அடுத்த வழிகாட்டி ஸ்டாலின் தான்! சூலூரில் ஒரேபோடு போட்ட துரைமுருகன்!

சட்டசபை இடைத்தேர்தலில் சூலூரில் திமுகவுக்கு வெற்றியை தந்தால், அடுத்த 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த இந்தியாவின் வழிகாட்டி ஸ்டாலின் தான் என, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.

 

சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குமரன் கோட்டம் பகுதியில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகித்தார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:

 

உணர்வு, உற்சாகம் இருப்பதால் தான் திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியவில்லை. கருணாநிதியிடம் இருந்து ராஜதந்திரத்தை கற்றுக் கொண்டவன் நான். அவர், மத்திய,மா நில அரசுகளை தூக்கி வீசக்கூடிய தந்திரத்தை பெற்றவர்.

 

இங்கு உட்கார்ந்து கொண்டு மத்தியில் ஆள்வது, பதவிக்கு வருபவர் யார் என யுக்தி தெரிந்தவர் ஸ்டாலின். அடுத்து இந்தியாவின் வழிகாட்டி ஸ்டாலின். ஸ்டாலினின் ஆற்றலும், ராஜதந்திரத்தையும் பார்த்தால், கண்ணை மூடினால் எனக்கு ஸ்டாலின் இன்னொரு கருணாநிதி போலத்தான் தெரிகிறார்.

 

சூலூரில் நடைபெற்ற திமுக பிரசார கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

 

இன்னும் 50 ஆண்டு காலம் ஸ்டாலினின் கையில் தான் தமிழகம் இருக்கும். மக்களவை தேர்தலில் 36 அல்லது 37 தொகுதிகளில் வெற்றி எங்கள் பக்கம். 18 சட்டசபை தொகுதிகளில் ஒன்றோ,இரண்டோ அதிமுக பெறுவது அரிது.

 

சூலூரை ஜெயித்துக்கொடுங்கள் அடுத்த 25 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காண்பிக்கிறேன். இந்த ஆட்சி ஒரு விதமான அமைச்சர்களை பெற்றிருக்கிறது.க ம்பராமாயணம் எழுதியது யார் என்பது கூட தெரியாதவர் அமைச்சராக உள்ளார். தனது அரசியல் அனுபவத்தை வைத்து தமிழகத்தில் ஸ்டாலினும், மத்தியிலே ராகுலும் இன்னும் 3 திங்களில் ஆட்சியில் அமருவார்கள்.

 

இக்கூட்டத்தில், திமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Leave a Reply