வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி! உயரப்போகிறது பெட்ரோல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், பெட்ரோல்- டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

ஈரானிடம் இருந்து இந்திய, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. ஆனால், ஈரானுடன் உள்ள பிரச்சனையால், அந்த நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டாமென்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

 

இதற்கு இந்தியா உள்ளிட்டவை அவகாசம் கேட்டன. இதையடுத்து வரும் மே 2ஆம் தேதி வரை அமெரிக்கா அவகாசம் தந்தது. மேலும் அவகாசம் நெருங்குவதால் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு, இந்தியாவை அமெரிக்கா நெருக்கி வருகிறது.

 

இச்சூழலில், ஈரானிடம் இருந்து இந்தியா வாங்கும் பிரண்ட் எனப்படும் கச்சா எண்ணெய் விலை லண்டன் சந்தையில் பீப்பாய் 75.45 டாலருக்கு அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் எண்ணெய் வள நாடுகள் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

 

அமெரிக்காவின் காலக்கெடு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளால் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எனினும் மக்களவை தேர்தல் நடப்பதால், வாக்குப்பதிவு முடிந்த பின் விலை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

 

இதனிடையே, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விற்பனை ஆகிறது. இது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றியும், டீசல் விலை 8 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.


Leave a Reply