குண்டு வெடிப்பில் தொடர்பா? வெளிநாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து 39 நாடுகளுக்கான விசா சலுகையை தற்காலிமாக அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.

 

அண்டை நாடான இலங்கையில், கடந்த 21 ஆம் தேதி தேவாலயம், ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

 

தற்போது பதற்றம் ஓரளவு தணிந்தாலும் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றும் கூட, மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் இருந்து 40 கி.மீ. தொலைவில் புகோடா என்ற நகரத்தில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அருகே, இந்த குண்டு வெடித்தது.

 

இதற்கிடையே தொடர் குண்டுவெடிப்புகளில் வெளிநாட்டவர் சதி என்ற தகவலை அடுத்து, 39 நாடுகளுக்கான விசா சலுகையை இலங்கை அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இத்தகவலை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா, தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.


Leave a Reply