அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை ஆகாவழி திட்டமாக மாற்றி விட்டார் முதல்வர் – சூலூர் திமுக வேட்பாளர் காட்டம்

கோவை மாவட்டம் சூலூரில் மதசார்பற்ற முற்போற்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்-

சூலூர் இடைதேர்தலில் நீண்ட நாளைக்கு பின்னர் திமுக போட்டியிடுவதாகவும்,

 

முக்கியமான கால கட்டத்தில் இந்த தேர்தல் நடத்தப்படுகின்றது எனவும்,
ஆளும் கட்சியால் இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. அனைத்து இடைதேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும் நிலை இருக்கின்றது. இதனால் ஆளும் கட்சியில் இருக்கும் எம்.எல்ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக கட்சியின் கொறடாவே வலியுறுத்துள்ளதாகவும்,திமுக அணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதால் இந்த நடவடிக்கையினை அவர்கள் எடுத்துள்ளனர்.

திமுக வேட்பாளா் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளா்கள் சந்திப்பு
திமுக வேட்பாளா் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளா்கள் சந்திப்பு

பரம்பிகுளம் அழியாறு பாசன பகுதியில் உள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், 1.5 லட்சம் விசைத்தறிகளில் 30 ஆயிரம் விசைதறிகள் ஜி.எஸ்.டி , பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளது.

 

அவினாசி அத்திகடவு திட்டத்தை ஆகாவளி திட்டமாக முதல்வர் மாற்றி இருக்கின்றார்
பம்ப் செய்து தண்ணீரை கொண்டு வருவது சாத்தியமில்லை, அவினாசி அத்திகடவு திட்டத்தை துவக்கி விட்டதாக கூறி மக்களை அதிமுகவினர் ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர்.

 

சூலூர் தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை,
முதியோர் பென்சன் முறையாக கிடைக்காத நிலை இருக்கின்றது என தெரிவித்தார்.மேலும்,
100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வில்லை,
மக்கள் கொதி நிலையில் இருக்கின்றனர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும், அதிமுக கட்சி இரண்டாக, மூன்றாக பிரிந்து இப்போது மத்திய அரசின் கைப்பாவையாக இயங்கி கொண்டு இருக்கின்றது.

 

நீட் தேர்வால் கிராம புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்,சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக எம்.எல்ஏவாக இருந்தவர் இது வரை எதுவும் செய்யவில்லை.

 

நிச்சயமாக திமுக மாநில சுயஆட்சியை எப்போதும் விட்டுக்கொடுக்காது.
சூலூரில் விசைத்தறிக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,
கரூர் கோவை 4 வழிச்சாலை அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

முன்னாள் எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகின்றது. ஆட்சிக்கு வந்த பின்னர் கோரிக்கைகள் வந்தால் அவரது உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த தலைமையிடம் வலியுறுத்தப்படும்.

 

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்ப்போம். விளைநிலங்களில் புதைவட தடமாக மின் கம்பிகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம். வேட்பு மனு தாக்கலின் போது நாம் தமிழர் கட்சியினர் , மாற்று வேட்பாளரையும் கணக்கில் எடுத்து தவறாக புரிந்து கொண்டனர். பின்னர் நிலையை அவர்களுக்கு விளக்கி சொல்லி விட்டோம்.

 

சூலூரில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.இடைத்தேர்தல் தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு,சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக்,வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply