4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்! வேட்பு மனுதாக்கல் இன்று தொடக்கம்

தமிழத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

 

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த மக்களவை தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. ஆனால், வழக்கு காரணமாக அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவில்லை.

 

இதற்கிடையே, சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் திடீரென காலமானார். காலியானதாக அறிவிக்கப்பட்ட அந்த தொகுதிக்கும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும், ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் நடக்கும் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

 

அதன்படி, இந்த நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு கடைசி நாள் வரும் 29ஆம் தேதியாகும். மனுக்கள் பரிசீலனை 30 ஆம் தேதி நடக்கிறது. மே மாதம் 2 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.


Leave a Reply