இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல்களில் காயமடைந்த சுமார் 500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.