அரசு பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ‘ஏசி’! கல்விச்சீர் வரிசையால் அடித்தது யோகம்

அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது.

 

இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் உஷா ராணி முன்னிலை வகித்தார்.

 

இதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கல்வி சீர் பொருட்கள், கிராம மக்கள் சார்பில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நூர் முஹம்மது தலைமையில் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளியில் வழங்கப்பட்டது.

 

 

நிகழ்ச்சியில் நூர் முஹமது பேசுகையில், இப்பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ஏசி இன்னும் ஒரு மாத காலத்தில் பொருத்தப்படும். இக்கிராமத்தில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

சாதிக் அலி, நூர்தீன், வழக்கறிஞர் அப்துல் ரஹ்மான், அப்துல் கரீம்,நசிர், மாலிக், சீனி, அரபி, ஜலிலா பைசல் ,ஜமில் அலி, தலைமை ஆசிரியர்கள் சக்கரகோட்டை குமரகுரு முடுக்குதரவை மரகதமணி, சடையன் வலசை ஜான்சி ராணி, எம்.எஸ்.கே.நகர் ஆசிரியர் சிவ பாலன்,பள்ளி மேலாண்மை குழு தலைவி நசீரா பேகம் மற்றும் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுச்சாமி செய்தார். ஆசிரியை சவிதா நன்றி கூறினார்.

-மகேந்திரன், இராமநாதபுரம்.


Leave a Reply