தேம்பித்தேம்பி அழுத அன்புமணி ராமதாஸ்! கண்ணீர் சிந்தியதற்கு இதுதான் காரணம்

Publish by: --- Photo :


வாக்கு சேகரிப்பின் போது அன்புமணி ராமதாஸ் கதறியழுத சம்பவம், பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

அதிமுக கூட்டணியில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர், நேற்றிரவு கடகத்தூர் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனத்தை பார்த்து, ஆர்வமுடன் குழந்தைகள் பின்னால் ஓடி வந்துள்ளனர்.

 

இதை பார்த்து உருகிப் போன அன்புமணி தனது வாகனத்தை நிறுத்த சொன்னார். வாகனத்தை பின் தொடர்ந்து வந்த குழந்தைகளிடம் பேசினார். அதற்குள் அங்கு கூடிவிட்ட பொதுமக்கள் மத்தியில் பேச நினைத்த அன்புமணி, தன்னையும் அறியாமல் அழத் தொடங்கினார்.

 

தன் மீது மக்கள் இவ்வளவு பாசம் வைத்துள்ளதற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அன்புமணி பேசினார். இது, அங்கு கூடியிருந்த பொதுமக்களையும் நெகிழச் செய்தது.