காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் எபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 44 பேரில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரியிரிழந்தனர். எபோலா நோய் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள் காங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ் நோயால், ஜூலை முதல் மார்ச் மாதம் வரை பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 650 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.