- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் வழியில் பறக்கும் படையினர் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவிப்பொறியாளரும், பறக்கும்படை அலுவலருமான செந்தில்குமார் தலைமையில் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் காந்திராஜ் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில்
ஈடுபட்டிருந்தனர்.பிற்பகல் சுமார் 3.00 மணிக்கு அந்த வழியே தனியார் வங்கிகளுக்கு ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்தை நிறுத்தி பறக்கும்படையினர் சோதனை செய்தனர். - சோதனையில் ஏ.டி.எம்.மேற்பார்வையாளர் சிவானந்தம் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம்.மையங்களில் வைப்பதற்காக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ1 கோடியே 2 லட்சத்து 26 ஆயிரத்து 417ஐ கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.மேலும், விசாரணையில் 3 ஏ.டி.எம்.மையங்களுக்கு வைப்பதற்காக கோவையில் இருந்து ரூ 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து வந்ததாகவும் வரும் வழியில் 2 ஏ.டி.எம்.மையங்களில் குறிப்பிட்ட தொகையை வைத்தது போக மீதித்தொகையை ஏ.டி.எம்.மையங்களுக்கு வைக்க கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது.பறிமுதல்
செய்யப்பட்ட தொகையை மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல்
நடத்தும் அலுவலரும் தாசில்தாருமான புனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.தொகை எண்ணி சரிபார்க்கப்பட்ட பின்னர் சீல்வைத்த பெட்டியில் வைக்கப்பட்டு சார்நிலைக்கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
மேலும் செய்திகள் :
பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் படுகொலை..!
கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!
புழல் சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை..!
நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்.. 18 வயது பெண் வெட்டி கொலை..!
கத்தி முனையில் 70 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை..!
விவாகரத்தான நடிகருடன் இரண்டாவது முறையாக இணையும் சாய் பல்லவி..!