போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் அந்தமான் தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை நிம்மதியிழக்க செய்து வருகிறது.
அதேபோல் இன்று காலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் போர்ட்பிளேர் உள்ளிட்ட இடங்களில், இன்று காலை 7.24 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால் பொதுமக்கள் சற்று பீதியடைந்தனர். சமதள பகுதிக்கு ஓடிவந்து தஞ்சமடைந்தனர். எனினும் அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த பாதிப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
பஸ்சுக்குள் புகுந்து டிரைவரை தாக்கிய இளைஞர்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?
முதல்வர் ஸ்டாலின், புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் புயல் குறித்து பேசினேன் : அமித்ஷா
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த 13 பேர்..!
உணவு, மின்சாரம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு..!