--- --:--:-- --

அமலாபாலை இரவு உணவுக்கு அழைத்த வழக்கு..!

3

தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற ஆவணத்தை நீக்கம் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த தமிழச்சி என்ற கலை நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் பங்கேற்பதாக இருந்தது.

 

இதற்காக சென்னை தி நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் அகாடமியில் அமலாபால் பயிற்சி எடுத்தார். அப்பொழுது அமலாபாலை சந்தித்த அழகேசன் என்பவர் மலேசியா செல்லும் பொழுது இப்ராகிம் என்பவர் உடன் இரவு உணவு அருந்த வேண்டும் என கேட்டுள்ளார்.

 

அதற்கு அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன் இப்ராகிம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்ற ஆவண ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு தொழிலதிபர்கள் பாஸ்கரன், ஸ்ரீதர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

 

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் குற்ற ஆவணத்தை நீக்கம் செய்ய முடியாது என கூறி தொழிலதிபர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon