பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு..!
பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீரும், ஆந்திர மாநிலம் அம்மபள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில் தற்போது 2800 கன அடி நீர் தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 33 அடியை எட்டி உள்ளதால் பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி 5 ஆண்டுகளுக்கு பிறகு முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






