பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் பலி..!
பாகிஸ்தான் பீரங்கி குண்டுகளால் எல்லையில் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளை எல்லைதாண்டி ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது வழக்கம் .
இந்த நிலையில் நேற்று ராஜோரி அருகே எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் எந்தவித முன்னறிவிப்புமின்றி தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
2 வீரர்கள் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டுக்கு இந்தியா சரிசமமாக பதிலடி கொடுத்துள்ளது.






