--- --:--:-- --

1,000 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்த சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம்..!

4

சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மேல் எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 39 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர்.

 

வரிசையாக பல கோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சொந்தமான 37 இடங்களில் சோதனை நடைபெற்றது.

 

சோதனை முடிவில் அந்த நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாகவிற்பனையை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு நடைபெற்று வந்திருப்பதாகவும் 150 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் வராத ஆடைகள், நகைகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

சோதனையின் போது கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும், 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர் இந்த விவகாரம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

Right Menu Icon