--- --:--:-- --

1 கோடி கேட்டு மிரட்டி தொழிலதிபர் கொலை..!

5

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கரூர் தொழிலதிபரை கடத்தி ஒரு கோடி கேட்டு மிரட்டிய கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியில் 65 வயதான சுவாமிநாதன் என்பவர் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் அங்கு வந்து பார்த்த போது லாரியில் இருந்தவர்கள் தப்பியுள்ளனர்.

 

பின்னர் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது நவீன், விஜய் என்பது தெரிய வந்தது. விசாரணையில் கொலை செய்யப்பட்ட சுவாமிநாதன் கரூரை சேர்ந்த தொழிலதிபர் என்பதும் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தியது தெரியவந்தது. மேலும் இவருடன் இருந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon