--- --:--:-- --

டாஸ்மாக் கடையில் இருந்த மதுபான பெட்டிக்குள் பாம்பு..!

6

கோயமுத்தூர் சரவணம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு மதுபானக் கடையில் இருந்த பெட்டியில் சாரை பாம்பு குட்டி ஒன்று இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சரவணம்பட்டியில் தமிழக அரசின் எலைட் மதுபானக் கடை ஒன்று உள்ளது.

 

அங்கு உயர் ரக மது பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று கடையில் இருந்த ஊழியர் ஒருவர் அங்கிருந்த மதுபாட்டில்களை பெட்டியிலிருந்து எடுத்து அடுக்கி வைத்துள்ளார். அந்த பெட்டிக்குள் சாரைப் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

 

இதனையடுத்து கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். ஒருவர் மட்டும் தைரியமாக பெட்டியில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களே அந்த பாம்பினை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon