--- --:--:-- --

உலகிலேயே முதல் 360 டிகிரி நீச்சல் குளம் ! வைரல் பதிவு

1559989807450

உலகிலேயே முதல் 360 டிகிரி நீச்சல் குளம் லண்டனில் அமைந்துள்ள நிலையில் இணையத்தில் அது குறித்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. 55 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டடத்தின் உச்சியில் கண்ணாடியால் ஆன நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

 

அதன் நான்கு சுவர்களுமே கண்ணாடியால் ஆனவை. அதிக உயரத்தில் இருந்தபடி லண்டனின் அழகை ரசித்துக்கொண்டே நீராடும் வகையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு  உள்ளது.  நீச்சல் குளத்தினுள் எப்படி செல்வது என்பது தான் இணையதளவாசிகளின் கேள்வியாக இருக்கிறது.

தங்களது 360 டிகிரி நீச்சல் குளம் புகைப்படங்கள் வெளியாகி பகிரப்படுவது கண்டு மகிழ்ச்சியடைந்த கேம்பஸ் நீச்சல்குள கட்டமைப்பு நிறுவனர் ஆலக்ஸ் ஹெக்ஸ்லே சுழலும் படிக்கெட்டுகள் நீச்சல் குள தரையிலிருந்து மனிதர்களை தூக்கிச்செல்லும் என்றும் ,குளத்திலிருந்து வெளியேற நினைப்பவர்கள் ஒரு பட்டனை அழுத்தினால் அந்த படிக்கெட்டு வந்து அழைத்து செல்லும் என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon