யூடியூபை பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்..!
சேலத்தில் யூடியூபை பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் NIA போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஓமலூர் அருகே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் சேலம் மாநகரை சேர்ந்த நவீன் – சக்ரவர்த்தி தன் நண்பர்களான இருவரும் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் யூடியூப் பார்த்தே துப்பாக்கி தயாரித்ததும் விசாரணையில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. பின்னர் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .



