அட்டைப் பெட்டிகளில் தண்ணீர் விற்கும் இளைஞர்கள்..!
ஹைதராபாத்தை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் இருவர் பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரிதும் குறைக்கும் வகையில் அட்டைப் பெட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
சுனித், சைதன்யா ஆகிய இருவரும் கேரோ வாட்டர் எனும் பெயரில் அட்டைப் பெட்டியில் தண்ணீரை அடைத்து விற்கும் தொழிலில் நாட்டிலேயே முதன்முறையாக தொடங்கியுள்ளனர். 5 லிட்டர் தண்ணீர் அட்டைப்பெட்டி உட்புறத்தில் 45 கிராம் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு 75 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் காலி அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சிக்கு தாங்களே எடுத்துக் கொள்வதாகவும் இளம் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.






