--- --:--:-- --

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரொனா..! டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ச்சி!

8

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக செர்பியா மற்றும் குரேஷ்ய நாட்டில் ஜோகோவிச் கண்காட்சி டென்னிஸ் தொடரை நடத்தினார்.

 

அத்தொடரில் கலந்து கொண்ட இரண்டு வீரர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்ட எடுத்து தொடர் பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து குடும்பத்துடன் செர்பியா திரும்பிய ஜோகோவிச்சுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கும் அவரது மனைவி ஜரினாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

தனக்கு எவ்வித அறிகுறியும் தென்படாத நிலையில் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள போவதாக ஜோகோவிச் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவருடன் பயணித்த அவரது மகனுக்கும் மகளுக்கும் தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon