மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுக்கும் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. நேற்றைய மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,550க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (ஜூலை 3) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,700க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,440க்கும் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,520க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





