--- --:--:-- --

மதுரையில் இன்று முதல் முழு பொது முடக்கம் அமல்!

9

மதுரையில் இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரவிருப்பதால் நேற்று காய்கறி உள்ளிட்ட இன்றியமையா பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் கடைகளில் நேற்று குவிந்தனர். மதுரையிலும் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு முழு முடக்கம் அமலுக்கு வர உள்ளது.

 

இதனையடுத்து மதுரை மீனாட்சி கல்லூரியில் அமைந்திருக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு மக்கள் நேற்று அதிகாலையிலேயே கூட்டம் கூட்டமாக வந்தனர். மேலும் பிபி குலம் சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதினர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

 

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகமாகிக்கொண்டே வருவதால் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon