தமிழக பட்ஜெட் தயாரிப்பு: அதிகாரிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை
தமிழக அரசு இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநிலத்தின் நிதிநிலை, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சித் தேவைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விஜய் ஆலோசனைகளை வழங்கினார். அரசு நிர்வாகத்தைச் சீரமைக்கவும், மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களை பட்ஜெட்டில் இணைக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.





