--- --:--:-- --

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது?

4

மிழகத்தில் நேற்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.இந்நிலையில் அனைவருக்கும் இடையே எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி பள்ளி திறப்பது எப்போது என்பதே. இதற்கான விடையாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி திறக்கும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு முன்னரே முடிந்த நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வந்தன.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வினை முன்னரே நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்த நிலையில் 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று முடிவடைந்தன.

 

ஒன்று மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதியே விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவுற்ற நிலையில், நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

ஜூன் 4 தேர்தல் முடிவு, வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் அறிவித்துள்ளார்.

 

இந்த விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.இதே நாளில் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனியார் பள்ளிகளில் 1-9ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கோடை வெயில் அதிகரித்து வருவதால் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை மேலும் ஒருவாரம் விடுமுறையை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Right Menu Icon