பாதம் காப்போம்..தமிழக அரசின் வித்தியாசமான திட்டம்..!
பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 80 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பாத பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணர்வு மற்றும் ரத்த நாள அடைப்பு உள்ளிட்டவற்றை கண்டறிந்து மருத்துவ நெறிமுறைகள் அடிப்படையில் ஆரம்ப வெளியீடுகளை மேற்கொண்டு இறப்புகளை தடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் திட்டத்திற்கு என ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2036 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதம் பாதிப்பு கண்டறிதல் மையங்கள் நிறுவ உள்ளது. மேலும் 100 அரசு மருத்துவமனைகள், 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நிறுவப்படும்.
பாத மருத்துவ மையங்கள் மற்றும் 15 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வசதிகளை நிறுவுவதன் மூலம் கால் புண், மருத்துவம், நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது.





