--- --:--:-- --

திருப்பூர் தெற்கில் தினேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

தினேஷ்குமார்

தெற்கு தொகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் தினேஷ்குமார்

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் தினேஷ்குமார் அவர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வரும் வேட்பாளருக்கு, செல்லும் இடமெல்லாம் பொதுமக்களிடையே உற்சாகமும் பேராதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தொகுதி முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் அவர் மேற்கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன. வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

தினேஷ்குமார்
தேர்தல் வாக்கு சேகரிப்பின்போஹ்டு கிரிக்கெட் விளையாடி ஆதரவு திரட்டிய தினேஷ்குமார்.

மக்களின் இந்த எழுச்சியானது வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சந்திப்பின் போது பேசிய வேட்பாளர் தினேஷ்குமார், மக்களின் தீர்மானம் தற்போது உறுதியாகிவிட்டதாகவும், திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொரு இல்லத்தையும் சென்றடைந்துள்ளதால் வெற்றி என்பது நிச்சயம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் செவிமடுத்து வரும் அவர், தொகுதி மேம்பாட்டிற்கான தனது தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் விளக்கி வருகிறார்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் நிலவும் தற்போதைய ஆதரவு அலை, திமுக கூட்டணிக்கு ஒரு வலுவான களத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. மக்கள் அளிக்கும் இந்த வரவேற்பு, தேர்தல் களத்தில் தினேஷ்குமார் அவர்களுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சிக்கு மக்கள் வாக்களிக்கத் தயாராக இருப்பதை இந்தத் தேர்தல் பரப்புரை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Right Menu Icon