மட்டமான துணியில் இருந்ததால் சீருடைகளை வாங்க மறுத்த தூய்மை பணியாளர்கள்..!
காரைக்குடி மாநகராட்சியில் மேயர் வழங்கிய சீருடைகள் தரம் இல்லை என்று கூறி தூய்மை பணியாளர்கள் சீருடைகளை வழங்காமல் திருடி சென்றனர். காரைக்குடி மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டு காலமாக நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான புதிய சீருடையை மாநகராட்சி மேயர் முத்துதுறை மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் வழங்கினர். ஆனால் சீருடைகள் தரம் இல்லை என்று கூறி தூய்மை பணியாளர்கள் சீருடைகளை வாங்காமல் திரும்பி சென்றனர்.





