--- --:--:-- --

பள்ளிக்குள் நடந்த அட்டூழியம்..இரவோடு இரவாக சுற்றி வளைத்த பொதுமக்கள்..!

8

டலூரில் பள்ளி வளாகத்திற்குள் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரின் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். சிதம்பரம் அருகே ஆண்டாள் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

 

இந்த பள்ளியில் உள்ள இரண்டு பழைய கட்டிடங்கள் கல்வித்துறையின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. இதனை இடித்து ஒப்பந்ததாரர் பள்ளிக்குள் ஐந்தடி ஆழம் வரை தோண்டி மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

 

தகவலறிந்து வந்த கிராம மக்கள் மணல் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை சிறை பிடித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon