--- --:--:-- --

காங்கேயத்தின் வளர்ச்சி நாயகன்… அமைச்சர் சாமிநாதன் தீவிர பிரசாரம்!

சாமிநாதன்

பரப்புரை வாகனத்தில் இருந்து மக்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன்

காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட தொட்டியபட்டி, K.G.K. நகர், அகிலாண்டபுரம், கோட்டை மாநகர் மற்றும் அழகேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டினர்.

காங்கேயம் மண்ணின் மைந்தராகவும், எளிய மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவருமான அமைச்சர் சாமிநாதன், கடந்த காலங்களில் இப்பகுதிக்குக் கொண்டு வந்த திட்டங்களை மக்கள் நன்கு அறிவார்கள்.

 

saminathan
அமைச்சர் சாமிநாதன், வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.

குறிப்பாக, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் பயன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்த்ததிலும், உள்ளூர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அமராவதி நகர், பங்களாபுதூர் மற்றும் கலிமேடு பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, பெண்களும் முதியவர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்ணா நகர், சவுண்டம்மன் கோவில் வீதி மற்றும் காமராஜ் நகர் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் அமைச்சர் காட்டி வரும் அக்கறை, இந்தத் தேர்தலில் அவருக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Right Menu Icon