--- --:--:-- --

அடிப்படை வசதி கோரிய பொதுமக்கள்… பிரசாரத்தின்போது செல்வராஜிடம் கோரிக்கை!

செல்வராஜ்

பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் செல்வராஜ்.

பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வராஜ் தனது தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக பல்லடம் பகுதி கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

கிராமப் பகுதிகளில் மக்கள் திரளாகக் கூடியிருந்து செல்வராஜுக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு தந்தனர். தங்கள் பகுதிக்கு குடிநீர் தேவை, அடிப்படைத் தேவைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அத்துடன் முதியவர்களும் குழந்தைகளும் சந்திக்கும் இன்னல்களை வேட்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். மக்களின் சிரமத்தைப் புரிந்து கொண்ட செல்வராஜ், சம்பந்தப்பட்ட துறையுடன் இணைந்து இப்பகுதியில் நிரந்தரப் பேருந்து நிறுத்தத்தை உடனடியாக உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தார்.

செல்வராஜ்
பொதுமக்களை சந்தித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த பல்லடம் திமுக வேட்பாளர் செல்வராஜ்.

தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் போன்ற முன்னோடித் திட்டங்களால் பல்லடம் மக்கள் அடைந்துள்ள பயன்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, பல்லடம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கூடுதல் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கத் தொழிற்பேட்டைகள் நவீனப்படுத்தப்படும் என்றும் அவர் அடுத்தகட்ட வாக்குறுதிகளை வழங்கினார்.

மத நல்லிணக்கத்தைப் பேணுவதிலும், அடித்தட்டு மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் திமுக அரசு எப்போதும் முன்னணியில் இருக்கும் என்பதை வலியுறுத்திய அவர், உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க பிரத்யேகப் புகார் மையம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Leave a Reply

Right Menu Icon