அமைச்சர் சாமிநாதன் விறுவிறு பிரசாரம்… மக்கள் உற்சாக வரவேற்பு!
காங்கேயம் பகுதி கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் சாமிநாதன்
காங்கேயம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, வெள்ளக்கோவில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குக்கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குமராண்டிசாவடி பகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அமைச்சர், தொடர்ந்து எஸ்.என்.பி நகர், அய்யம்பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்தார்.
நால்ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் சந்திப்புகளில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், தமிழக அரசின் சாதனைகளையும் தொகுதிக்குக் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களையும் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அவர் விளக்கினார்.





