--- --:--:-- --

நெருங்கியது சட்டசபைத் தேர்தல்… செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு!

செல்வராஜ்

வாக்கு சேகரிப்பின்போது ஆரத்தி எடுத்து செல்வராஜை வரவேற்ற மக்கள்

பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், பல்லடம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், பல இடங்களிலும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு மத்தியிலும், விடுதலைப் போராட்ட வீரர், தியாக மறவர் என்று போற்றப்படும் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி புளியங்காட்டு தோட்டத்தில் அவரது திருக்கோவிலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

செல்வராஜ்
தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செய்த தெற்கு வேட்பாளர் செல்வராஜ்.

முன்னதாக, பல்லடம் பெரிய பள்ளிவாசலில் நிர்வாகிகளுடனும்,நம்முடைய இஸ்லாமிய பெருமக்களிடமும் உதயசூரியன் சின்னத்திற்கு சேகரித்தார். “மக்களின் நலனே இந்த இயக்கத்தின் இலக்கு. உங்களின் ஒருவனாக, உங்கள் தேவைகளை உணர்ந்து செயல்பட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று வேட்பாளர் க. செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.

வாக்குச் சேகரிப்பு நிகழ்வின் போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். “உதயசூரியன்” சின்னத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon