மொழியை திணித்தால் எந்த மொழியையும் ஏற்க மாட்டோம் : முதல்வர்
பிற மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்ப்பதே அவற்றின் மீதான வெறுப்பு என கருதக்கூடாது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், எந்த மொழியையும் ஏற்க மாட்டோம் என்பதே திமுகவின் மொழி கொள்கை என தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழிசை சங்கத்தின் 80வது ஆண்டு விழாவினை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இசை பேரறிஞர் பட்டமும், சர்குணநாதருக்கு பன்இசை கலைஞர் பட்டமும், போர்பதக்கம், வெள்ளி பேழை ஆகியவற்றையும் முதலமைச்சர் வழங்கினார்.
உரையாற்றிய ஸ்டாலின் தமிழிசை சங்கத்திற்கும் திராவிட கழகத்திற்கும் ஆன நெருக்கத்தையும் நினைவு கூர்ந்துள்ளார். அந்நிய மொழிகளின் ஊடுருவல் காரணமாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிட்டவர் திராவிட இயக்கம் தமிழை பாதுகாக்க பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.
திணிக்கப்படும் மொழியை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும் முதலமைச்சர் உறுதிப்பட தெரிவித்தார்.





